தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி கோயிலில் குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்தார். முன்னதாக அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து மூலஸ்தானம் சென்று சாமி தரிசனம் செய்த அவர் அதன் பின்னர் தாயார் சன்னதிக்குச் சென்று வழிபாடு மேற்கொண்டார். இதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், கோவிலை சிறப்பாக பராமரித்து வருகிறார்கள் எனவும், அதற்கு தமிழக அரசுக்கு நன்றியை தெரிவித்து கொள்வதாகவும் கூறினார்.
நாளை மாலை சென்னையில் தமிழ்நாடு முதலமைச்சரை சந்திக்க நேரம் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், அவரை சந்தித்து பேசவுள்ளதாகவும் தெரிவித்தார்.))