தமிழகச் சட்டப்பேரவையின் கூட்டத்தொடர் ஜனவரி ஐந்தாம் நாள் ஆளுநர் உரையுடன் தொடங்க உள்ளதாகப் பேரவைத் தலைவர் அப்பாவு தெரிவித்துள்ளார்.
சென்னைத் தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கொரோனா தொற்றுப் பரவல் குறைந்துள்ளதால் புனித ஜார்ஜ் கோட்டையிலேயே சட்டமன்றக் கூட்டம் நடைபெற உள்ளதாகத் தெரிவித்தார்.
உறுப்பினர்களுக்குத் தொடுதிரை வசதி செய்யப்பட உள்ளதாகவும், பார்வையாளர்களை அனுமதிப்பது பற்றி இன்னும் முடிவெடுக்கவில்லை என்றும் அப்பாவு தெரிவித்தார்.