குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த ராணுவ வீரர் சாய் தேஜாவின் புகைப்படத்திற்கு அவரது மகன் முத்தம் கொடுக்கும் காட்சிகள் சமூக வலைதலங்களில் வைரலாகி வருகிறது.
குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் பலியான சித்தூர் மாவட்டத்தின் ரேகடா கிராமத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் சாய் தேஜாவின் உடல் ராணுவ மற்றும் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது. அவருக்கு ஒரு ஆண் குழந்தையும், ஒரு பெண் குழந்தையும் இருக்கும் நிலையில், தந்தையின் புகைப்படத்திற்கு அவரது 4வயது மகன் முத்தம் கொடுக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளது.
தந்தை எங்கே என உறவினர்கள் கேட்ட போது, புகைப்படத்தை காட்டி முத்தமிடும் காட்சிகள் வைரலாகி வருகின்றன