சுற்றுச்சூழலை பாதுகாக்க வாரத்திற்கு ஒரு நாள் பொது ஊர்தி அல்லது மிதிவண்டியில் வரவேண்டும் என தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் வேண்டுகோள் விடுத்ததற்கிணங்க, அரியலூர் மாவட்ட ஆட்சியர் ரமண சரஸ்வதி, இல்லத்தில் இருந்து அலுவலகத்திற்கு நடந்தே சென்று விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.
இது போல் திங்கள் அல்லது புதன் கிழமை நடந்தே அலுவலகம் செல்ல திட்டமிட்டுள்ளதாகவும் மற்ற அலுவலர்களையும் பின்பற்ற அறிவுறுத்தியுள்ளதாகவும் அவர் கூறினார்.
பொதுமக்களும் இதை பின்பற்ற வேண்டும் எனவும் ஆட்சியர் கேட்டுக்கொண்டார்.