திருப்பூரில் அரசு பேருந்து ஓட்டுனர் மற்றும் காவலர் ஆகியோர் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டதாக அளித்த புகார் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பல்லடம் போக்குவரத்து கிளைப் பணிமனையில் பணிபுரியும் பேருந்து ஓட்டுனர் வடிவேல் என்பவர் நேற்று பல்லடத்தில் இருந்து திருப்பூருக்கு பேருந்தை இயக்கியுள்ளார். திருப்பூர் வந்த பிறகு பேருந்தை பழைய பேருந்து நிலையத்தில் நிறுத்திய போது, அங்கு மப்டியில் இருந்த காவலர் சதிஷ்குமார் என்பவர் போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் நிறுத்த வேண்டுமென கூறியதால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
அப்போது சதிஷ்குமார் தம்மை தாக்கியதாக ஓட்டுநர் வடிவேலும், இதேபோல் வடிவேல் தம்மை தாக்கியதாக காவலர் சதீஷ்குமாரும் போலீசில் புகார் கொடுத்துள்ளனர்.