முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் மற்றும் அவருடன் பயணித்தவர்களின் இறப்பு குறித்து அவதூறு செய்திகள் பரப்பிய பாகிஸ்தான் டுவிட்டர் கணக்குகளின் மீது வழக்கு பதிவு செய்துள்ளதாக தமிழ்நாடு காவல்துறை இயக்குநரகம் தெரிவித்துள்ளது.
இயக்குநரகம் வெளியிட்டுள்ள பத்திரிகை செய்தியில், 2டுவிட்டர் கணக்குகள், தவறான மற்றும் அவதூறு செய்திகளை பரப்பி, பயங்கரவாதத்தை ஊக்குவிக்க வழிவகைச் செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக கூறப்பட்டுள்ளது.
இவற்றின் மீது தமிழ்நாடு குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வுத்துறையின் சைபர் கிரைம் பிரிவு வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேறகொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.