நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே வாகன தணிக்கையின் போது விற்பனைக்காக 7ஆயிரம் லிட்டர் கலப்பட டீசலை டேங்கர் லாரியில் கடத்திச் சென்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
நாராயணபாளையம் பகுதியில் குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை ஆய்வாளர் பாலமுருகன் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அவ்வழியே வந்த டேங்கர் லாரியை நிறுத்தி சோதனை செய்ததில், சுமார் 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான கலப்பட டீசலை விற்பனைக்காக திருச்செங்கோட்டிற்கு கொண்டு செல்வது தெரியவந்தது.
இதனையடுத்து லாரி ஓட்டுனர் முருகேசன், உடனிருந்த உரிமையாளர் மோகன் கைது செய்யப்பட்டு, டேங்கர் லாரியும் பறிமுதல் செய்யப்பட்டது.