லஞ்சம் பெற்றுக்கொண்டு ஒப்பந்தப் பணிகளை வழங்கியதாக, தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் துணை பொதுமேலாளர் முத்துடையார் உள்ளிட்ட 4 பேர் மீது, சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது.
மதுரை - ராமேஸ்வரம் சாலை மற்றும் தஞ்சை - புதுக்கோட்டை சாலை பணிகளுக்காக, ஒப்பந்ததாரர்களிடம் முறையான ஆவணங்களை பெறாமல் ஒப்புதல் வழங்கியதாகவும், இதன் மூலம் அரசுக்கு சுமார் 1 கோடியே 38 லட்சம் ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதாகவும், அவர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
மேலும், லஞ்சம் கொடுத்து ஒப்பந்தத்தை பெற்றதாக, தெலங்கானாவை சேர்ந்த KNR கன்ஸ்ட்ரக்சன், சென்னையை சேர்ந்த காயத்ரி SPL ஆகிய இரு நிறுவனங்கள் மீதும், சிபிஐ அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.