தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரியில் ராகிங் எனக் கூறி 2ஆம் ஆண்டு மாணவன் தற்கொலைக்கு முயன்ற விவகாரத்தில், மூன்றாம் ஆண்டு மாணவர்கள் 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
விடுதியில் தங்கி 2ஆம் ஆண்டு பயின்று வந்த நாமக்கலைச் சேர்ந்த மாணவனை, அங்குள்ள மூன்றாம் ஆண்டு மாணவர்கள் சிலர் முட்டிப்போட சொல்லியும், சிகரெட் வாங்கி வரச் சொல்லியும் ராகிங் செய்ததாக கூறப்படுகிறது.
இது குறித்து விடுதி காப்பாளர்களிடம் புகாரளித்த நிலையில், அவர்கள் கண்டுகொள்ளாததால் மன உளைச்சலுக்கு ஆளான அந்த மாணவன், தற்கொலைக்கு முயன்றதாக சொல்லப்பட்டது.
இந்த நிலையில், சம்பவத்தன்று சீனியர் மாணவர்கள் அந்த மாணவனை தாக்கியதாக கூறப்படும் நிலையில், மாணவர்கள் 4 பேர் மீதும் கேலிவதை தடுப்பு சட்டத்தின் கீழ் தருமபுரி நகர போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.