சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள மல்டி மீடியா ஆராய்ச்சி மையத்தின் ஆவணங்களை ஆய்வு செய்ததில் 3 கோடி ரூபாய் வரை குளறுபடிகள் நடந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2012- 20ஆம் ஆண்டு வரையிலான நிதி ஆவணங்களை ஆய்வு செய்த போது 3 கோடி ரூபாய் வரை குளறுபடிகள் நடந்திருப்பது தெரிய வந்ததாக மத்திய கணக்கு தணிக்கைத் துறை தெரிவித்துள்ளது.
நிதி மேலாண்மை, காசோலை வழங்குவது மற்றும் உபகரணங்கள் வாங்குவதில் குளறுபடிகள் நடந்திருப்பதாகவும், இதுகுறித்து விளக்கமளிக்க அண்ணா பல்கலைக்கழக பதிவாளருக்கு கடிதம் எழுதி உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.