திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் நகராட்சிக்கு உட்பட்ட நீர்நிலைகளை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள 452 கட்டிடங்களுக்கு நோட்டீஸ் வழங்கும் பணி தொடங்கியது.
கொடைக்கானலில் நீர் நிலைகள் மற்றும் புறம்போக்கு நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கக்கோரிய வழக்கில் நடவடிக்கை மேற்கொண்டு அறிக்கை அளிக்க கொடைக்கானல் நகராட்சிக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டிருந்தது.
அதன்படி,முதற்கட்டமாக ஏரிச்சாலை அருகே ஆற்று நீரோடை பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு அதிகாரிகள் நோட்டீஸ் வழங்கினர். மேலும், நீர்நிலைகளில் ஆக்கிரமிப்புகள் கண்டறியப்பட்டால் ஆக்கிரமிக்கப்பட்ட இடங்களின் சொத்து வரி, குடிநீர் இணைப்பு ரத்து செய்யப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.