அரசு விழாக்களில் தமிழ்த்தாய் வாழ்த்து மற்றும் தேசிய கீதம் ஆகியவை பதிவு செய்யப்பட்ட கருவிகளுக்கு பதிலாக பயிற்சி பெற்றவர்களை கொண்டு பாட வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அரசு அறிக்கையில், அரசு விழாக்களில் பதிவு செய்யப்பட்ட கருவிகள் வாயிலாக தமிழ்த்தாய் வாழ்த்து மற்றும் தேசிய கீதம் இசைக்கப்படுவதால், விழாவில் பங்கேற்போர் உதட்டளவில் கூட பாடுவதில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், எந்த நோக்கத்திற்காக தமிழ்த்தாய் வாழ்த்து, தேசிய கீதம் இசைக்கப்படுகிறதோ அந்த நோக்கம் சிதைந்து போவதாக அறியப்படுவதால், இனிவரும் காலங்களில், இதற்கென பயிற்சி பெற்றவர்களை கொண்டு தமிழ்த்தாய் வாழ்த்தையும், தேசிய கீதத்தையும் பாடுவதற்கு ஏற்பாடு செய்யுமாறு தமிழக அரசு உத்தரவிடப்பட்டுள்ளது.