கோயம்புத்தூரில் 16 வயது பள்ளி மாணவியை கடத்திச் சென்று தலைமறைவான டியூசன் மாஸ்டர் குறித்து பொதுமக்கள் தகவல் தெரிவிக்கலாம் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
சரவணம்பட்டியில் உள்ள டியூசன் சென்டர் ஒன்றில் மணிமாறன் என்பவன் ஆசிரியராக பணியாற்றி வந்துள்ளான். அப்பகுதியை சேர்ந்த 12ஆம் வகுப்பு பள்ளி மாணவி அவனிடம் டியூசன் படித்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் கடந்த ஜூலை 30ஆம் தேதி அவன் மாணவியை மயக்கி கடத்திச் சென்றதாக புகார் எழுந்தது. இதனையடுத்து போலீசார் போச்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து அந்த நபரை தேடி வருகின்றனர். இது குறித்து சரவணம்பட்டி காவல் நிலைய ஆய்வாளர் செந்தில்குமார் செய்தியாளர்களை சந்தித்தார்.