பள்ளி, கல்லூரி மற்றும் அரசு ஆவணங்களில் தமிழில் பெயர் எழுதும் போது முன் எழுத்தையும் தமிழிலேயே எழுத வேண்டும் என தமிழ் வளர்ச்சித்துறை தெரிவித்துள்ளது.
தமிழ் ஆட்சி மொழி சட்டத்தினை முழுமையாக செயற்படுத்துவது குறித்து தமிழ் வளர்ச்சித்துறை வெளியிட்டுள்ள அரசாணையில் அரசு ஊழியர்கள் அனைவரும் தமிழிலேயே கையொப்பம் இடவும், முன் எழுத்தை தமிழிலேயே எழுதவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
அரசுத்துறை ஆணைகள், ஆவணங்களில் பொதுமக்களின் பெயரை முன்னெழுத்துடன் முழுமையாக தமிழில் குறிப்பிடவும், அரசு சார்ந்த விண்ணப்பங்களில் மக்கள் தமிழிலேயே கையொப்பம் இடவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.