இளைஞர்கள் மென்பொருள் துறையில் அதிக வேலை வாய்ப்புகளை பெறும் வகையில் திறன் மேம்பாட்டு பயிற்சிகளை வழங்க திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்தார்.
சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள தமிழ் இணைய வழி கல்வி கழக அலுவலகத்தில் அலுவல் ஆய்வு கூட்டம் நடத்தியபின் செய்தியாளர்களை சந்தித்த அவர், 8 லட்சம் பக்கங்கள் கொண்ட ஓலைச்சுவடிகள் மின்னணு மயமாக்க பட்டு இணையதளத்தில் வெளியிடப்பட உள்ளதாக கூறினார்.
தமிழ் இணைய வழி கல்வியில் பல்வேறு முக்கிய திட்டங்களை செயல்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும், தமிழை பிழையின்றி பேச,எழுத, உச்சரிக்க ஆசிரியர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் பயன்படும் வகையில் புதிய பாடத்திட்டத்தை உருவாக்கி வழங்க உள்ளதாகவும் தெரிவித்தார்.