குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தோரில் 10 பேரின் உடல்கள் டி.என்.ஏ. பரிசோதனை உள்ளிட்ட அறிவியல் ரீதியிலான சோதனைகள் மூலம் அடையாளம் காணப்படும் என இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.
ஹெலிகாப்டர் தீப்பிடித்து எரிந்ததில், அதில் இருந்த 10 பேரின் உடல்கள் உருக்குலைந்து இருப்பதால், அடையாளம் காணுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக ராணுவம் கூறியுள்ளது.
இதில், முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் அவரது மனைவி மதுலிகா,பிரிகேடியர் எல்எஸ் லிடர் ஆகிய 3 பேரின் உடல்கள் மட்டும் அடையாளம் கண்டுள்ளதாகவும், எஞ்சிய வீரர்களின் உடல்களை அடையாளம் காண தேவையான அனைத்து அறிவியல் ரீதியான, சாத்தியமான நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளதாகவும் ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.