ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கி விபத்து
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே ராணுவ ஹெலிகாப்டர் கீழே விழுந்து விபத்து
காட்டேரி மலைப்பாதையில் ராணுவப் பயிற்சியின் போது கீழே விழுந்து தீப்பற்றி எரிந்து விபத்து
கடும் பனிமூட்டம் காரணமாக ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கி விபத்து ஏற்பட்டதாக தகவல்
ஹெலிகாப்டர் விபத்து - 4 பேர் பலி எனத் தகவல்
ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கிய விபத்தில் 4 பேர் உயிரிழப்பு எனத் தகவல்
ராணுவ ஹெலிகாப்டரில் பிபின் ராவத் உள்ளிட்ட 14 பேர் இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது
ராணுவ வீரர்கள் 3 பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி எனத் தகவல்
ஹெலிகாப்டரில் பிபின் ராவத் இருந்ததாக தகவல்
முப்படைகளின் தலைமை தளபதியாக இருக்கும் பிபின் ராவத் விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரில் இருந்ததாக தகவல்
பிபின் ராவத், அவரது மனைவி உள்ளிட்டோர் அந்த ஹெலிகாப்டரில் பயணித்ததாக தகவல்
வானிலை சரியில்லாத காரணத்தால், ஹெலிகாப்டரை திருப்பிவிடப்பட்டதாக தகவல்
ராணுவ ஹெலிகாப்டரில் பிபின் ராவத் உள்ளிட்ட 14 பேர் பயணித்ததாக தகவல்
கோயம்புத்தூர் சூலூர் விமானப்படை தளத்தில் இருந்து ஹெலிகாப்டர் பிபின் ராவத் உள்ளிட்டோர் பயணம் எனத் தகவல்
முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத், சாலை மார்க்கமாக குன்னூர் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டதாகத் தகவல்
ஆனால், ஹெலிகாப்டர் மூலம், பிபின் ராவத் உள்ளிட்டோர் பயணமானதாக தகவல்
குன்னூர் வெலிங்டனில் கடும் பனிமூட்டம் காரணமாக, ஹெலிகாப்டர் தரையிறங்குவதில் சிக்கல் இருந்துள்ளது
பிபின் ராவத் பயணமான ஹெலிகாப்டர் கோயம்புத்தூர் சூலூர் விமானப்படை தளத்திற்கு திருப்பி விடப்பட்டதாக தகவல்
கடும் பனிமூட்டத்தால் காட்டேரி மலைப்பாதையில் உள்ள மலை ஒன்றின் மீது ஹெலிகாப்டர் மோதி விழுந்திருக்கலாம் எனத் தகவல்
கோயம்புத்தூர் சூலூர் விமானப்படை தளத்தில் இருந்து காலை 10.30 மணியளவில் ஹெலிகாப்டரில் பயணமானதாக தகவல்
கோயம்புத்தூரில் இருந்து சாலை மார்க்கமாக பிபின் ராவத் செல்ல போலீசார் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்திருந்தனர்
ஆனால், கோயம்புத்தூரில் இருந்து திடீரென ஹெலிகாப்டரில் பயணமான நிலையில், அது விபத்துக்குள்ளானதாக தகவல்
ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதாக, பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துவந்த போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதாக தகவல்
பிபின் ராவத், அவரது மனைவி, விமானிகள் என 14 பேர் ராணுவ ஹெலிகாப்டரில் பயணித்துள்ளனர்
ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில், பிபின் ராவத் படுகாயம் அடைந்திருப்பதாக தகவல்
ஹெலிகாப்டர் விபத்தில் 4 பேர் பலி எனத் தகவல்
குன்னூர் அருகே ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் 4 பேர் உயிரிழப்பு எனத் தகவல்
ஹெலிகாப்டரில் 2 விமானிகள், 9 ராணுவ கமாண்டோ வீரர்கள் இருந்ததாக தகவல்
பிபின் ராவத், அவரது மனைவி உள்ளிட்ட 14 பேர் ஹெலிகாப்டரில் பயணித்துள்ளனர்
ஹெலிகாப்டர் விபத்தில், முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் படுகாயம் அடைந்து, கவலைக்கிடம் எனத் தகவல்
விமானப்படையின் எம்ஐ-17வி5 ஹெலிகாப்டர்
இந்திய விமானப்படைக்குச் சொந்தமான எம்ஐ-17வி5 ஹெலிகாப்டரில் பிபின் ராவத் பயணம்
முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் குடும்பத்தினரோடு பயணம் - இந்திய விமானப்படை உறுதி
ஹெலிகாப்டர் விபத்து குறித்து உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவு - இந்திய விமானப்படை
ஹெலிகாப்டர் விபத்தில் சிலர் 80% தீக்காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளதாக, இந்திய ராணுவ தரப்பில் தகவல்
பிபின் ராவத், அவரது மனைவி மதுலிக்கா ராவத் ஆகியோர் பயணம் - விமானப்படை தரப்பில் தகவல்
தமிழகம் விரைகிறார் பாதுகாப்புத்துறை அமைச்சர்
ஹெலிகாப்டர் விபத்து - பிரதமர் நரேந்திர மோடியுடன், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆலோசனை
பிரதமருடனான ஆலோசனைக்குப் பின், பாதுகாப்புத்துறை அமைச்சர் தமிழ்நாட்டிற்கு விரைகிறார்
பிபின் ராவத்தோடு பயணமானவர்கள் விபரம்
பிபின் ராவத்தோடு பயணமானவர்கள் விபரம் தொடர்பாக விமானப்படை தரப்பு தகவல் வெளியாகியுள்ளது
பிபின் ராவத்தோடு அவரது மனைவி மதுலிக்கா ராவத் பயணமாகியுள்ளார்
பிரிகேடியர் லிட்டார், லெப்டினன்ட் கர்னல் ஹர்ஜிந்தர் சிங் ஆகியோரும் ஹெலிகாப்டரில் பயணம் எனத் தகவல்
இராணுவ வீரர்கள் நாயக் குருசேவாக் சிங், நாயக் ஜிதேந்திரா குமார் ஆகியோர் பயணம் எனத் தகவல்
விவேக் குமார், சாய் தேஜா, ஹவில்தார் சப்தால் உள்ளிட்ட இராணுவ பாதுகாப்பு அலுவலர்களும் பயணம் எனத் தகவல்
பிபின் ராவத் மனைவி பலி எனத் தகவல்
ஹெலிகாப்டர் விபத்தில் பிபின் ராவத் மனைவி மதுலிக்கா ராவத் உயிரிழந்ததாக தகவல்
ஹெலிகாப்டர் விபத்தில், படுகாயமடைந்த பிபின் ராவத் கவலைக்கிடமாக உள்ளதாகத் தகவல்
கோயம்புத்தூரில் இருந்து 6 சிறப்பு மருத்துவக் குழுக்கள் குன்னூருக்கு விரைந்துள்ளனர்
ஹெலிகாப்டரின் பெட்ரோல் டேங்க் தொடர்ந்து தீப்பற்றி எரிந்து கொண்டிருப்பதாக தகவல்
பிரதமர் நரேந்திர மோடி அவசர ஆலோசனை
முப்படைகளின் தலைமை தளபதி பயணித்த ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான விவகாரம்
ராணுவ ஹெலிகாப்டர் விபத்து குறித்து பிரதமர் நரேந்திர மோடி அவசர ஆலோசனை
பாதுகாப்புத்துறை அமைச்சர் உள்ளிட்டோருடன், பிரதமர் நரேந்திர மோடி அவசர ஆலோசனை
நவீன ஹெலிகாப்டர் எம்ஐ-17வி5
இராணுவம், விமானப்படை தேவைகளுக்காக ரஷ்யாவிடம் இருந்து எம்ஐ-17வி5 ஹெலிகாப்டர்கள் கொள்முதல்
எம்ஐ-17வி5 ஹெலிகாப்டர் சுமார் 13 ஆயிரம் கிலோ எடையை சுமந்து செல்லும் திறன் கொண்டதாகும்
எம்ஐ-17வி5 ஹெலிகாப்டரில் ஒரே நேரத்தில், 2 விமானிகள் உட்பட 36 பேர் வரையில் பயணிக்கலாம்
எம்ஐ-17வி5 ஹெலிகாப்டர் பெரும்பாலும், இராணுவ மீட்பு பணிகள், பொருட்களை கொண்டு செல்ல பயன்படும்
நீலகிரி ஆட்சியருடன் முதலமைச்சர் பேச்சு
ஹெலிகாப்டர் விபத்து தொடர்பாக நீலகிரி ஆட்சியருடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
ஹெலிகாப்டர் விபத்து மீட்பு பணி குறித்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டறிந்தார்
விபத்தில் சிக்கியவர்களுக்கு உரிய மருத்துவ சிகிச்சையை உறுதிபடுத்துமாறு முதலமைச்சர் உத்தரவு
விபத்தில் சிக்கி காயமடைந்தவர்களுக்கு உயர்தர மருத்துவ சிகிச்சையை உறுதிப்படுத்த முதலமைச்சர் உத்தரவு
ஹெலிகாப்டர் விபத்து - தமிழ்நாடு அரசு ஆலோசனை
இராணுவ ஹெலிகாப்டர் விபத்து குறித்து தலைமைச் செயலாளர் தலைமையில் ஆலோசனை
ஹெலிகாப்டர் விபத்தின் மீட்பு பணிகள், காயமடைந்தவர்களுக்கான உயர் சிகிச்சை தொடர்பாக ஆலோசனை
ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தோரின் உடல்கள் மீட்பு தொடர்பாக, தலைமைச் செயலாளர் ஆலோசனை
பொதுத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் அதிகாரிகளுடன் தலைமைச் செயலாளர் ஆலோசனை
குன்னூர் விரைகிறார் தமிழ்நாடு டிஜிபி
ஹெலிகாப்டர் விபத்து - குன்னூர் விரைகிறார் தமிழ்நாடு டிஜிபி சைலேந்திர பாபு
மீட்பு பணிகளை துரிதப்படுத்துவது தொடர்பாக குன்னூர் விரைகிறார் டிஜிபி சைலேந்திர பாபு
ஹெலிகாப்டரில் விரைந்த மருத்துவக்குழுக்கள்
ஹெலிகாப்டர் விபத்தில் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவக் குழுக்கள் விரைந்தது
கோயம்புத்தூர் சூலூர் விமானப்படைத் தளத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் மருத்துவக்குழு பயணம்
குன்னூர் விரைகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
ஹெலிகாப்டர் விபத்து - குன்னூர் விரைகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
சென்னையில் இருந்து மாலை 5 மணியளவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பயணம் எனத் தகவல்
சென்னையிலிருந்து கோயம்புத்தூர் விமான நிலையம் சென்று, அங்கிருந்து குன்னூர் விரைவதாக தகவல்
ஹெலிகாப்டர் விபத்து - நாடாளுமன்றத்தில் அறிக்கை
குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து தொடர்பாக, நாடாளுமன்றத்தில் பாதுகாப்புத்துறை அமைச்சர் அறிக்கை
பிபின் ராவத் உள்ளிட்டோர் பயணமான ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது தொடர்பாக நாடாளுமன்றத்தில் அறிக்கை
ஹெலிகாப்டர் விபத்து - மத்திய அமைச்சரவை ஆலோசனை
குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து தொடர்பாக, மத்திய அமைச்சரவை ஆலோசனை
கேபினட் கூட்டத்தில், பிரதமரிடம், ஹெலிகாப்டர் விபத்து பற்றி பாதுகாப்புத்துறை அமைச்சர் எடுத்துரைத்ததாக தகவல்
விமானப்படை தளபதி குன்னூர் விரைகிறார்
இந்திய விமானப் படை தளபதி வி.ஆர்.சவுத்திரி குன்னூர் செல்ல இருப்பதாக தகவல்
சூலூர் விமானப் படை தளத்திற்கு வி.ஆர்.சவுத்திரி சென்றடைந்துள்ளதாக தகவல்
ஹெலிகாப்டர் விபத்தில் 11 பேர் உயிரிழப்பு
ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான இடத்தில் 11 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர் - நீலகிரி மாவட்ட ஆட்சியர்
எஞ்சிய 3 பேரின் நிலை குறித்து விரைவில் தெரிவிக்கப்படும் - நீலகிரி ஆட்சியர்
பிபின் ராவத் வீட்டில் ராஜ்நாத் சிங்
தலைநகர் டெல்லியில் பிபின் ராவத் வீட்டிற்கு மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சென்றுள்ளார்
பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பிபின் ராவத் குடும்பத்தினரை சந்தித்துப் பேசினார்
குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து - மீட்பு பணிகள் குறித்து, குடும்பத்தினரிடம் ராஜ்நாத் சிங் எடுத்துரைத்ததாக தகவல்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டுவிட்டர் பதிவு
பிபின் ராவத் பயணமான ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதை அறிந்து அதிர்ச்சி அடைந்தேன் - முதலமைச்சர்
மீட்புப் பணிகளை துரிதப்படுத்த நீலகிரி மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது - முதலமைச்சர்
நீலகிரி மாவட்டம் குன்னூருக்கு இன்று மாலையே விரைகிறேன் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்