தமிழ்நாடு சிட்கோ தொழில் மனைகளின் விலை குறைக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளர்.
இது தொடர்பாக வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில், ஊத்தங்கரை தொழிற்பேட்டையில் ஏக்கர் ஒன்றுக்கு 75%, கும்பகோணத்தில் 73%, காரைக்குடி, பிடாநேரி, ராஜபாளையம் தொழிற்பேட்டைகளின் மனைமதிப்பு 30% முதல் 54% வரையிலும் குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனாவால் ஏற்பட்ட தொழில்முடக்க நிலையில் இருந்து தொழில்முனைவோர் மீள வழிவகை செய்ய தொழில் மனைகளின் விலையை குறைத்து அரசாணை பிறப்பட்டுள்ளதாக முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதன் மூலம், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்முனைவோர் குறைவான விலையில் மனை ஒதுக்கீடு பெற்று தொழில் துவங்க முடியும் என குறிப்பிட்ட அவர், தொழில் மனைகள் ஒதுக்கீடு பெற்று தொழில்முனைவோர் பயனடையுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.