திருப்பூர் மாவட்டம் பொங்கலூரில் லாரி உரிமையாளரிடம் 25 ஆயிரம் ரூபாய் கையூட்டு பெற்ற நில வருவாய் ஆய்வாளரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக பிடித்தனர்.
பொங்கலூர் வழியாக லாரிகள் செல்ல அனுமதிக்க வேண்டுமானால் மாதந்தோறும் 25 ஆயிரம் ரூபாய் தர வேண்டுமென லாரி உரிமையாளர் முருகேஷிடம், நில வருவாய் ஆய்வாளர் செந்தில்குமார் கேட்டதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் முருகேஷ் முறையிட்ட நிலையில், ரசாயணம் தடவிய ரூபாய் நோட்டுகளை வழங்கி செந்தில்குமாரை கையும் களவுமாக பிடித்தனர்.
மேலும் அலுவலகத்தில் ஏற்கனவே இருந்த 45 ஆயிரம் ரூபாயுடன் சேர்த்து 70 ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்து விசாரித்து வருவதாக லஞ்ச ஒழிப்பு போலீசார் தெரிவித்தனர்.