ராணிப்பேட்டை நகராட்சி பொறியாளர் வீட்டில் சுமார் 15 மணி நேரமாக நடைபெற்ற சோதனையில் 23 லட்சம் ரூபாய் ரொக்கம், 193 சவரன் தங்க நகைகள்,காசோலைகள், வெள்ளி பொருட்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.
லாலாப்பேட்டை கிராமத்தில் வசித்து வரும் ராணிப்பேட்டை நகராட்சி பொறியாளரான செல்வகுமார் என்பவரது வீட்டில் சென்னை மற்றும் திருவண்ணாமலை லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று அதிரடி சோதனை நடத்தினர்.
15 மணி நேரத்திற்கும் மேலாக நடத்திய சோதனையில் கட்டுக்கட்டுக்காக கணக்கில் வராத பணம்,தங்கம்,வெள்ளி நகைகள், மற்றும் நிலஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் பொறியாளர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.