சொத்துகளை எழுதிக் கேட்டு மகன் உணவளிக்க மறுப்பதாக புகாரளிக்க வந்த மூதாட்டியிடம் கீழே அமர்ந்து பொறுமையாக ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் குறைகளைக் கேட்டறிந்தார்.
வரகூர் பட்டணம் கிராமத்தை சேர்ந்த சுசீலா என்ற அந்த மூதாட்டி, ஊன்றுகோல் உதவியுடன் தள்ளாடியபடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்திருந்தார். தரையில் அமர்ந்திருந்த சுசீலாவை அவ்வழியாகச் சென்ற மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் பார்த்துவிட்டு, மண்டியிட்டவாறு அமர்ந்து குறைகளைக் கேட்டறிந்தார்.
தனக்கு இரு மகன்கள் இருக்கின்றனர் என்றும் சொத்துகளை எழுதிக் கேட்டு, உணவளிக்காமல் துன்புறுத்தும் மூத்த மகன், இளையமகன் உணவளிக்க வந்தால் அவனையும் மிரட்டி விரட்டுகிறான் என்றும் இதனால் தாம் பட்டினி கிடப்பதாகவும் கூறினார்.