ராணிப்பேட்டை மாவட்டம் லாலாப்பேட்டையில் உள்ள நகராட்சி பொறியாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் நடத்தும் சோதனையில் கணக்கில் வராத 170 சவரன் தங்க நகைகள், 23 லட்ச ரூபாய் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.
ராணிப்பேட்டை நகராட்சி பொறியாளர் செல்வகுமார், ஏற்கனவே வேலூர் மாநகராட்சியில் உதவி பொறியாளராக பணியாற்றிய நிலையில், அவர் மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில், அவரது வீட்டில் இன்று காலை முதல் தொடர்ந்து நடைபெற்று வரும் சோதனையில் ரொக்கம், நகை, பத்திரங்கள் மற்றும் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக லஞ்ச ஒழிப்பு போலீசார் தெரிவித்துள்ளனர்.