தடை செய்யப்பட்ட ஆன்லைன் விளையாட்டுக்கள் மூலம் யூடியூப்பில் ஆபாசமாக பேசி, பல கோடி ரூபாய் பணம் பறித்த மோசடி வழக்கில் கைதான பப்ஜி மதன், முதுகு தண்டுவட வலி காரணமாக ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளான்.
குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த பப்ஜி மதன் முதுகு தண்டுவட வலி காரணமாக அவதிப்பட்டு வந்த நிலையில், அவனை சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் உள்ள கைதிகள் வார்டில் போலீசார் அனுமதித்துள்ளனர்.
முதுகு வலி தொடர்பான சிகிச்சைகள் மதனுக்கு அளிக்கப்பட்டு வருவதாகவும் போலீசார் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.