சேலம் மாவட்டம் மேட்டூர் அணையின் நீர்தேக்க பகுதியில் otter எனப்படும் நீர் நாய்கள் வசிப்பது தெரியவந்துள்ளது . பன்னவாடி பரிசல் துறை பகுதியில் காவிரி ஆற்றின் நடுவே உள்ள பாறையில் இரண்டு நீர் நாய்கள் காணப்பட்டன.
கர்நாடக எல்லையான பிலிகுண்டு காவிரி ஆற்றில் அதிக அளவில் நீர் நாய்கள் வாழுகின்றன. இந்நிலையில், கடந்த சில நாட்களாக காவிரி நீர்பிடிப்பு பகுதியில் பெய்த கனமழை காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனையடுத்து மேட்டூர் காவிரி ஆற்றில் மிகவும் அரிதாக காணக்கூடியவை என கருதப்படும் நீர்நாய்கள் இப்போது தென்பட்டுள்ளன.