வேலூர், திருவள்ளூர், சென்னை மாவட்டங்களில் கொரோனா பரவல் உயர்ந்துள்ளதால் அதனை கட்டுப்படுத்த போதிய நடவடிக்கை எடுக்கக்கோரி தமிழக அரசுக்கு மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.
இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷண் எழுதிய கடிதத்தில், நவம்பர் 3ஆம் வாரத்தைவிட அதற்கான பிறகான வாரத்தில் 3 மாவட்டங்களிலும் தொற்று பாதிப்பு அதிகரித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
மேலும், மாநிலத்தில் கொரோனா தொற்றுப் பரவலை கட்டுப்படுத்த தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்த அவர், அதிக நோய் பாதிப்பு கண்டறியப்படும் பகுதிகள் மற்றும் விமான நிலையங்களில் கண்டறியக்கூடிய தொற்றுகளின் மாதிரிகளை உடனடியாக மரபணு பகுப்பாய்வு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.