கோயம்புத்தூர் விளாங்குறிச்சி பகுதியில் காரை மோதவிட்டு மூன்று இருசக்கர வாகனங்களை சேதப்படுத்தும் நபரின் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.
எலக்ட்ரிக் பொருட்கள் கடை வைத்திருப்பவர் தங்கராஜ், அவரது கடைக்கு அருகிலேயே கறிகோழி மற்றும் மீன்கடை வைத்திருப்பவர் செல்வம், இருவருக்குமிடையே கடைக்கு முன்பாக யார் போர்டு வைப்பது என்பதில் கடந்த ஆறு மாதங்களாக பகையிருந்து வந்த நிலையில், நேற்று செல்வம் தனது சுவீஃப்ட் காரின் மூலம் தங்கராஜ் எலெக்ட்ரிக் கடைக்கு முன்பாக நிறுத்தப்பட்டிருந்த மூன்று இருசக்கர வாகனங்கள் மீது மோதி சேதத்தை ஏற்படுத்தியதாக சொல்லப்படுகிறது.
இதுகுறித்து செல்வத்தை கைது செய்த பீளமேடு காவல் நிலையத்தினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.