நாமக்கல் மாவட்டம் வேலகவுண்டம்பட்டியில், ஆள்கடத்தல் வழக்கில் விசாரணை அறிக்கையில் பெயர்களை சேர்க்காமல் இருக்க 10 ஆயிரம் லஞ்சம் பெற்ற காவல் சிறப்பு உதவி ஆய்வாளர், கைது செய்யப்பட்டார்.
கடந்த 2020-ஆம் ஆண்டு வேலகவுண்டம்பட்டி காவல் நிலையத்தில் ஆள் கடத்தல் தொடர்பாக வழக்கு பதிவாகி, விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் சண்முகம், சம்பந்தப்பட்ட வழக்கு விசாரணை அறிக்கையில் செல்வக்குமார் உள்ளிட்ட மூவரின் பெயர்களை சேர்க்காமல் இருக்க 10 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து, இன்று காலை செல்வகுமார் சிறப்பு காவல் உதவி ஆய்வாளரிடம் 10 ஆயிரம் ரூபாயை லஞ்சமாக கொடுத்துள்ளார். இதனை அப்பகுதியில் மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரை கையும் களவுமாக கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.