நியாயவிலைக் கடைகளில் பொங்கல் சிறப்பு தொகுப்பு வழங்குவதை கண்காணிக்க மாவட்ட ஆட்சியர்கள் தலைமையில் குழு அமைத்து, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் சுமார் 2 கோடியே 15 லட்சம், அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கு, 20 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பினை வழங்க, ஏற்கனவே நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக, பொங்கல் பரிசு தொகுப்பை நியாயவிலை கடைகள் மூலம் விநியோகம் செய்வதற்கு, மாவட்ட ஆட்சியர்கள் தலைமையில், கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர், மாவட்ட வேளாண்மைத்துறை இணை இயக்குனர் மற்றும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் மண்டல மேலாளர் ஆகியோர் அடங்கிய குழு அமைத்து, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.