கனமழை காரணமாக கடலூர் மாவட்டம் மலட்டாற்றில் கரை புரண்டு ஓடிய வெள்ளத்தின் நடுவிலும், பழுதடைந்த மின்கம்பத்தை சரி செய்த மின்வாரிய ஊழியர்கள்.
ரெட்டிச்சாவடி அருகே ஆற்றின் நடுவே இருந்த மின் கம்பம் வெள்ளத்தில் அடித்துச் செல்லும் நிலை ஏற்பட்டது. இந்நிலையில், மின் கம்பத்தின் வழியாக பெரிய காட்டுப்பாளையம், நல்லவாடு உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரத்திற்கும் அதிகமான நுகர்வோருக்கு மின்சாரம் சென்று கொண்டிருந்த நிலையில், மின்சாரம் துண்டிக்கப்படும் அபாயம் ஏற்பட்டது.
இந்நிலையில், மஞ்சக்குப்பம் பிரிவுக்கு உட்பட்ட மின்வாரிய ஊழியர்கள் புதிய மின் கம்பத்தை வெள்ளத்தில் நட்டு மின் பாதையை சீரமைத்தனர்.