ஆந்திர மாநில முன்னாள் முதல்வரும், தமிழ்நாட்டின் முன்னாள் ஆளுநருமான ரோசய்யா வயது மூப்பு காரணமாக காலமானார்.
அவருக்கு வயது 88. இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களின் ஒருவரான ரோசய்யா ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தில் 1933 ஆம் ஆண்டு பிறந்தவர். இவர், ஆந்திர மாநிலத்தின் 2முறை சட்டமன்ற உறுப்பினராகவும், 5முறை எம்எல்சியாகவும் இருந்துள்ளார்.
அதன் பின் சாலை மற்றும் கட்டிடத்துறை அமைச்சர், தொழில்துறை அமைச்சர், போக்குவரத்துத்துறை அமைச்சர், நிதியமைச்சர் என பல்வேறு பொறுப்பு வகித்த ரோசய்யா, 2009-10 ஆந்திர மாநில முதல்வராகவும் 2011-16 வரை தமிழக ஆளுநராகவும் இருந்துள்ளார்.
இந்நிலையில், மிகுந்த அனுபவமும், அறிவாற்றலும், மூத்த அரசியல்வாதியுமான ரோசய்யாவின் மறைவு வேதனையளிப்பதாகவும், அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிப்பதாகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.