செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் அரசுப்பேருந்து உட்பட 4 வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானதில் 5 பேர் காயமடைந்தனர்.
ஜானகிபுரம் பகுதியில் சாலையில் சென்று கொண்டிருந்த லாரி முன்னால் சென்ற வாகனத்தை வலதுபுறமாக முந்திச் செல்ல முயன்ற போது வேகத்தை குறைத்து பின் வாங்கியதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து லாரிக்கு பின்னால் வந்த அரசுப்பேருந்தை அதன் ஓட்டுனர் திடீரென பிரேக் அடித்து நிறுத்தியதால், தொடர்ந்து வந்த 2 ஆம்னி பேருந்துகளும், அதற்கிடையே வந்த கார் ஒன்றும் அடுத்தடுத்து ஒன்றன் பின் ஒன்றாக மோதிக் கொண்டன. இதில் காரில் வந்த 2 பெண்கள், 2 சிறுவர்கள் உட்பட 5 பேர் காயமடைந்தனர்.
போக்குவரத்து விதிகளின் படி வாகனங்களுக்கு இடையே இடைவெளியை பின்பற்றாததால் விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.