வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்காகக் களப்பணி ஆற்றிய தூய்மைப் பணியாளர்கள் உட்பட அனைவருக்கும் ஐயாயிரம் ரூபாய் ஊக்கத் தொகை வழங்க வேண்டுமெனத் தமிழ்நாடு முதலமைச்சருக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார்.
அவர் தனது அறிக்கையில், பேரிடர் காலத்திலும், பெருந்தொற்றுக் காலத்திலும் தங்கள் உயிரைத் துச்சமெனக் கருதி அல்லும் பகலும் அயராது ஓய்வின்றி உழைப்பவர்கள் தூய்மைப் பணியாளர்கள் எனக் குறிப்பிட்டுள்ளார்.
2015ஆம் ஆண்டு சென்னையில் வெள்ளப்பெருக்கின்போது குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளர்களுக்கு மாநகராட்சி சார்பில் இரண்டாயிரம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்பட்டதை சுட்டிக்காட்டியுள்ளார்.