தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் இனிமேல் வழக்கம் போல் மதியம் 12 மணி முதல் இரவு 10 மணி வரை செயல்படும் என டாஸ்மாக் மேலாண்மை இயக்குனர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
கொரோனா பரவல் அதிகரித்ததை அடுத்து கடந்த மே மாதம் 10-ம் தேதி மூடப்பட்ட டாஸ்மாக் கடைகள், ஜூலை மாதம் 5-ம் தேதி முதல் மீண்டும் திறக்கப்பட்டு காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை இயங்கி வந்தன. இந்நிலையில் தற்போது கொரோனா பரவல் குறைந்து வருவதை அடுத்து வழக்கம் போல் டாஸ்மாக் கடைகள் மதியம் 12 மணி முதல் இரவு 10 மணி வரை செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மாவட்ட டாஸ்மாக் மேலாளர்களுக்கு, டாஸ்மாக் மேலாண்மை இயக்குனர் சுப்பிரமணியன் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், அனைத்து டாஸ்மாக் கடைகளும் புதிதாக அறிவிக்கப்பட்ட நேரத்தில் செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.