ஒமிக்ரான் தொற்று முன்னேச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளிகளில் கொரோனா தடுப்பு வழிகாட்டுதல்களை கட்டாயமாக பின்பற்ற ஈரோடு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளர்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட சுற்றறிக்கையில், 1 முதல் 8-ஆம் வகுப்பு வரை சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்தப்பட வேண்டும் என்றும் வகுப்புகளை நேரடியாகவும், ஆன்லைனிலும் நடத்திக்கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பள்ளிகளில் நீச்சல் குளங்களை மூட வேண்டும் என உத்தரவிட்ட முதன்மைக் கல்வி அலுவலர், இறை வணக்கக் கூட்டம், விளையாட்டு நிகழ்ச்சிகள், கலாச்சார நிகழ்வுகளை தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தி உள்ளார்.
இதேபோல், பள்ளிகளில் நாட்டு நலப்பணித் திட்டம், தேசிய மாணவர் படை செயல்பாடுகளை அனுமதிக்கக் கூடாது என்றும் மாணவர்கள் முகக்கவசம் அணிவதை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.