தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் முன்னாள் தலைவர் வெங்கடாசலம், தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவராக பொறுப்பு வகித்து வந்த போது வேளச்சேரியில் உள்ள இவரது வீடு, அலுவலகம் உட்பட ஐந்து இடங்களில் கடந்த செப்டம்பர் 23-ம் தேதி லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். இதில் 13 லட்சம் ரூபாய் பணமும், 11 கிலோ தங்கமும், 15 கிலோ எடையுள்ள சந்தனமர பொருட்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
இந்த வழக்கில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய லஞ்ச ஒழிப்புத்துறை தீவிரம் காட்டி வந்த நிலையில், வெங்கடாசலம் திடீரென வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்த வேளச்சேரி போலீசார், தற்கொலை குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.