முல்லைப் பெரியாறு அணையில் இருந்து முன்னறிவிப்பின்றித் தண்ணீர் திறந்துவிடுவது தொடர்பாகத் தமிழ்நாடு முதலமைச்சருக்குக் கேரள முதலமைச்சர் கடிதம் எழுதியுள்ளார்.
பினராயி விஜயன் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், முன்னறிவிப்பின்றித் தண்ணீர் திறந்து விடுவது தொடர்பாகத் தமிழக முதலமைச்சருக்குத் தெரிவிக்க ஒரு கடிதம் அனுப்பியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
முன்கூட்டித் திட்டமிட்டு, படிப்படியாக, போதிய முன்னெச்சரிக்கை கொடுத்த பிறகு தண்ணீர் திறந்து விடுவதை உறுதி செய்யுமாறு தமிழக முதலமைச்சரிடம் கேட்டுக் கொண்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.