வேலூர் மாநகராட்சியில், பொது இடங்களில், கொரோனா தடுப்பூசி போடாதவர்கள் வந்து செல்ல அனுமதி கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, வேலூர் மாநகராட்சி சார்பில் ஒட்டப்பட்டுள்ள நோட்டீசில், நியாயவிலைக் கடைகள், வியாபார நிறுவனங்கள், சூப்பர் மார்க்கெட், திருமண மண்டபம், திரையரங்குகள், தங்கும் விடுதி, டீக்கடைகள், வங்கிகள், பள்ளி கல்லூரிகள் மற்றும் ஹோட்டல்கள் உள்ளிட்டவற்றில், தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்களுக்கு அனுமதி மறுக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது.
விதிகளை பின்பற்றாத பொதுமக்கள் மற்றும் நிறுவன உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், வேலூர் மாநகராட்சி எச்சரித்துள்ளது.