ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டி கால்நடை சந்தைக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து கொண்டு வரப்பட்ட கால்நடைகள் சுமார் 2 கோடி ரூபாய்க்கு விற்பனையானது.
புளியம்பட்டியில் வாரந்தோறும் வியாழக்கிழமை நடைபெறும் கால்நடைச்சந்தைக்கு ஈரோடு, கோவை, திருப்பூர் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும், கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்களிலிருந்தும் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டு விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் வாங்கிச் செல்வர்.
கடந்த வாரங்களில் விற்பனை மந்தமான நிலையில் நடைபெற்றது. இந்நிலையில், இந்த வாரங்களில் மாடுகளின் விற்பனை அதிகரித்ததால் வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.