திராவிடர் கழக தலைவர் கி.வீரமணியின் 89ஆவது பிறந்தநாளை ஒட்டி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
சென்னை அடையாறு கஸ்தூரிபாய் நகரிலுள்ள கி.வீரமணி வீட்டுக்கு சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அவருக்கு பொன்னாடை அணிவித்து புத்தகம் பரிசாக வழங்கி, பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்.
அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு , எ.வ.வேலு , எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் மற்றும் கவிஞர் வைரமுத்து ஆகியோரும் முதலமைச்சர் உடன் சென்று கி.வீரமணிக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர். பதிலுக்கு அனைவருக்கும் புத்தகம் கொடுத்து கி.வீரமணி நன்றியை தெரிவித்துக் கொண்டார்.