ஸ்வாதி கொலை வழக்கில் சிறையில் இருந்த ராம்குமார் மின்சாரம் தாக்கி இறந்தது தொடர்பாக மாநில மனித உரிமைகள் ஆணையம் நடத்தும் விசாரணைக்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைகாலத் தடை விதித்துள்ளது.
இது தொடர்பாக தாக்கலான மனுவில், ராம்குமார் மரணம் நடந்து ஓராண்டுக்குள் மனித உரிமை ஆணையம் தானாக முன்வந்து வழக்கு தொடர முடியும் என்றும், ஆனால் நான்கு ஆண்டுகளுக்கு பிறகு விசாரிக்க முடியாது என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. ஏற்கனவே தேசிய மனித உரிமை ஆணையம் விசாரித்து வழக்கை முடித்து வைத்த நிலையில், மாநில மனித உரிமை ஆணையம் தன்னிச்சையாக வழக்கு தொடர்ந்து விசாரித்து வருவதாகவும் மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதிகள் கே.கல்யாணசுந்தரம், வி.சிவஞானம் அடங்கிய அமர்வு, மனித உரிமை ஆணைய பதிவாளர், ராம்குமாரின் தந்தை பரமசிவம் ஆகியோர் பதில் அளிக்க உத்தரவிட்டனர்.