மயிலாடுதுறை அருகே போலி ஆவணங்களை சமர்ப்பித்து, விவசாயிகளின் பயிர்க்காப்பீட்டுத் தொகையில் இருந்து பல லட்சம் ரூபாயை தனது குடும்பத்தினரின் வங்கிக் கணக்குக்கு மாற்றிய கிராம நிர்வாக அலுவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
அகரகீரங்குடி - முட்டம் கிராமத்தில் கனமழை காரணமாக சேதமான பயிர்களுக்கு இழப்பீட்டுத் தொகையாக ஏக்கருக்கு 22,000 ரூபாயை காப்பீட்டு நிறுவனம் அறிவித்தது. இந்த காப்பீட்டுத் தொகையில் 4-இல் ஒருபங்கை போலி ஆவணங்கள் தயார் செய்து, வி.ஏ.ஓ திருமலைசங்கு தனது மனைவி, மகள்கள், உறவினர் பெயரில் பரிமாற்றம் செய்திருந்தது தெரியவந்ததாகக் கூறப்படுகிறது.
விவசாயிகளின் நிலத்தின் பேரில் பயிர்க்கடன் பெற்று அது தள்ளுபடியும் செய்யப்பட்டதும் தெரியவந்த நிலையில், திருமலைசங்கு பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.