சூப்பர் சரவணா ஸ்டோர்ஸ் மற்றும் சரவணா செல்வரத்தினம் குழுமங்களுக்கு சொந்தமான கடைகள், நிறுவனங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகிறது.
வரி ஏய்ப்பு செய்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் சென்னை, கோவை, நெல்லை, மதுரையில் 15-க்கும் மேற்பட்ட இடங்களில் ரெய்டு நடைபெற்று வருகிறது. ராஜரத்தினம் குடும்பத்தினரால் நிர்வகிக்கப்படும் சூப்பர் சரவணா ஸ்டோர் குழுமத்திற்கு சொந்தமான துணிக் கடைகள், நகைக்கடைகள், பாத்திரக் கடைகளில் மற்றும் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
ஏற்கனவே கடந்த 2018 ஆம் ஆண்டு சூப்பர் சரவணா ஸ்டோர் தொடர்பான இடங்களில் நடந்த சோதனையில் 40 கோடி ரூபாய் ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு செய்தது கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்பட்டது.
இதேபோன்று, சரவணா செல்வரத்தினம் குழுமத்திற்கு சொந்தமான இடங்களிலும் சோதனை நடைபெறுகிறது. சோதனை நடைபெறும் இடங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.