அதிமுக சிறுபான்மையினர் நலப்பிரிவு செயலாளரும், முன்னாள் அமைச்சருமான அன்வர்ராஜா அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
இதுதொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் விடுத்துள்ள அறிக்கையில், கட்சிக் கட்டுப்பாட்டை மீறி, தலைமையின் முடிவுக்கு மாறான கருத்துக்களைத் தெரிவித்து, கட்சிக்குக் களங்கம் ஏற்படும் வகையில் செயல்பட்டதால் அன்வர்ராஜா கட்சியின் அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.