ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாப்பேட்டை அருகேயுள்ள செங்காடு பெரிய ஏரி 50 ஆண்டுகளுக்கு பின்னர் நிரம்பியுள்ள நிலையில், மக்கள் கிடா வெட்டி பிரியாணி விருந்து வைத்து கொண்டாடினர்.
வாலாஜாப்பேட்டை சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த தொடர் மழையின் காரணமாக செங்காடு கிராமத்தில் உள்ள 500 ஏக்கர் பரப்பளவிலான பெரிய ஏரி 50 ஆண்டுகளுக்கு பின்னர் முழு கொள்ளளவை எட்டியுள்ளது.
இதனால் மகிழ்ச்சியடைந்த கிராம மக்கள் மலர்தூவி உபரி நீரை வரவேற்றதோடு, கிடா வெட்டி, பிரியாணி சமைத்து ஊருக்கே விருந்து வைத்தனர்.