நீலகிரி மாவட்டம் எல்லநள்ளி அருகே காலில் காயத்துடன் சுற்றித்திரிந்த காட்டெருமையை போதை இளைஞர் ஒருவர் தடியால் தாக்கிய காட்சிகள் வெளியாகியுள்ளன. சிஎஸ்ஐ கல்லூரி அருகே உள்ள சாலையில் காலில் காயத்துடன் காட்டெருமை ஒன்று புற்களை மேய்ந்து கொண்டிருந்தது.
அப்போது மதுபோதையில் கையில் கம்புடன் வந்த இளைஞர் ஒருவர் காட்டெருமையை சரமாரியாக தாக்கினார். பதிலுக்கு அந்த காட்டெருமை இரண்டு முறை அந்த இளைஞரை தாக்க முயற்சித்த நிலையில், அந்த இளைஞரும் விடாமல் தாக்கினான். சிறிது நேரத்தில் வலி தாங்காமல் காட்டெருமை அங்கிருந்து வனப்பகுதிக்குள் சென்றது.
இந்த காட்சிகள் இணையத்தில் வைரலான நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த வனத்துறையினர் இளைஞரை தேடி வருகின்றனர்.