விதிகளை பின்பற்றாமல் எந்த பேனரும் வைக்க அனுமதிக்க கூடாது, என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விழுப்புரத்தில் அமைச்சர் பொன்முடியை வரவேற்று, பேனர் வைக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்த, தினேஷ் என்னும் 12 வயது சிறுவன், மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.
இதுதொடர்பான வழக்கை விசாரித்த நீதிபதிகள், சட்டவிரோதமாக பேனர் வைக்கும் நடைமுறைக்கு, முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றும், பேனர் வைக்கும் நிகழ்ச்சிகளில், முதலமைச்சர் கலந்துகொள்ள மாட்டார், என கூறுவது மட்டும் போதாது, என்றும் தெரிவித்தனர்.
மேலும், பேனர் வைக்க அனுமதி பெறாதவர் மீது, யாரிடம் புகார் அளிக்க வேண்டும், அவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்படுகிறது, எனவும் கேள்வி எழுப்பினர். மேலும், இதன் விசாரணையை 4 வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.