கோவை ராமநாதபுரம் பகுதியில் உள்ள மீன் கடையில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த சுமார் 86 கிலோ எடைக் கொண்ட மிகப்பெரிய மீனை மக்கள் வியந்து பார்த்து சென்றனர்.
கர்நாடக மாநிலம் மங்களாபுரம் பகுதியில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள், yellow fintuna என்னும் அந்த அரிய வகை மீனை பிடித்துள்ளனர்.
அந்த மீன் மங்களாபுரத்தில் இருந்து கொண்டுவரப்பட்டு ராமநாதபுரம் பகுதியில் உள்ள மிஸ்டர் ஃபிஷ் என்னும் கடையில் கிலோ 500 ரூபாய் என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது.