தமிழகத்தில் ஒமிக்ரான் வைரஸ் இதுவரை கண்டறியப்படவில்லை, என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.
சென்னை சைதாப்பேட்டையில் நடைபெறும் வேலைவாய்ப்பு முகாமில், பணி நியமன ஆணைகளை வழங்கிய பின்னர், அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், இவ்வாறு தெரிவித்தார். மேலும், பல்வேறு பெயர்களில், வைரஸ் பரவி வரும் நிலையில், தமிழகத்தில் 8 இடங்களில் இருந்து மாதிரிகள் சேர்க்கப்படுவதாகவும், அவர் தெரிவித்தார்.
மேலும், அரசுக்கு எதிராக, தேவையற்ற போராட்டங்களை நடத்த வேண்டாம் என்றும், 4 அல்லது 5 மாதங்கள் பணியாற்றியவர்களை, பணி நிரந்தரம் செய்ய முடியாது, என்றும் அமைச்சர் மா.சுப்பிரமணியம் தெரிவித்தார்.