சென்னை நந்தம்பாக்கத்தில் ராணுவத்திற்கு சொந்தமான நிலத்தை புறம்போக்கு நிலமாக அறிவித்ததை ரத்து செய்யக் கோரிய மனுவை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்ற நீதிபதிகள் ராணுவ நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை 8 வாரத்திற்குள் அகற்ற தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர்.
சிங்காரவேலு என்பவர் தொடர்ந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், துளசிங்கபுரத்தில் உள்ள நிலம் ராணுவத்திற்கு சொந்தமானது என தமிழக அரசு மற்றும் மாநகராட்சி உறுதிபடுத்துவதால், ராணுவ நிலத்தை ஆக்கிரமிப்பதை அனுமதிக்க முடியாது என தீர்ப்பு வழங்கினர். ஆதி திராவிடர்கள் வசிக்கும் பகுதியாக இருந்தால், மாற்று இடங்களை ஒதுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.