காஞ்சிபுரத்தில் வரதட்சணை வழக்கில் விசாரணையை வேகமாக முடித்து அறிக்கை சமர்ப்பிக்க 25 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்றதாக சமூக நலத்துறை பெண் அலுவலர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
வரதட்சணை கொடுமை எனக் கூறி தாம்பரத்தை சேர்ந்த கிருஷ்ணபிரசாத் மீது அவரின் மனைவி, போலீசில் புகார் அளித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் சமூக நலத்துறை அலுவலர் பிரேமாவின் உதவியாளர், விசாரணையை வேகமாக முடித்து அறிக்கை சமர்ப்பிக்க கிருஷ்ண பிரசாத்திடம் லஞ்சமாக 50 ஆயிரம் ரூபாயும், முன் பணமாக 25 ஆயிரம் ரூபாயும் கேட்டுள்ளார்.
கிருஷ்ண பிரசாத் அளித்த புகாரின் பேரில் நடவடிக்கை மேற்கொண்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு அலுவலர்கள், கையூட்டு முன் பணம் பெற்ற போது பிரேமாவை கைது செய்தனர்.